போதுமான நிதியின்றி அல்லது மூடப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து காசோலை வழங்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையில், புதிய சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி, இவ்வகை சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்டவர்களுக்கு, வழங்கிய காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு இணையான அபராதம் மற்றும் இரண்டாண்டு சிறைத்தண்டனை வரையிலான தண்டனை விதிக்க முடியும்.
மேலும், இந்தச் சட்டத்தினால், மீளத் திரும்பும் (bounce ஆகும்) காசோலைகள் சட்டபூர்வ சான்றாகக் கருதப்படும் என்றும், இது வங்கிகளுக்கு உயர் பாதுகாப்பை வழங்குவதே முக்கிய நோக்கமாகும் என்றும் நீதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Views: 332