வடக்குப் பகுதிகளில் இடம்பெற்ற அரச தாக்குதல்களை ஆதாரமாகக் காட்டும் முக்கியமான சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 23ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினத்தின் அகழ்வுப் பணிகள் மூலம் மேலும் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது வரை சித்துப்பாத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மொத்த என்புக்கூட்டுத் தொகை 104 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்றைய தினத்தில் ஒரு என்புக்கூட்டுத் தொகுதி முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், சர்வதேச சாட்சிகள் மற்றும் நீதிமன்றத் தேடல்களுக்கு இது முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post Views: 472