Thayagam Tamil Radio Australia

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பின் பின்னணி!

January 21, 2026

Spread the love

அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு (Petrodollar) சவால் விடும் வகையில் வெனிசுலா எடுத்து வரும் பொருளாதார மாற்றங்களே அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்க உண்மையான காரணம் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெனிசுலாவிடம் சவுதி அரேபியாவை விட அதிகமாக, சுமார் 303 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. தனது நாட்டின் எண்ணெயை டாலருக்குப் பதிலாக சீனாவின் ‘யுவான்’ (Yuan) நாணயத்தில் விற்கத் தொடங்கியதும், பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இணைய ஆர்வம் காட்டியதும் அமெரிக்காவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முன்னதாக, 2000-ம் ஆண்டில் எண்ணெயை ‘யுரோ’வில் விற்க முயன்ற ஈராக் அதிபர் சதாம் உசேன் மற்றும் 2009-ல் ஆப்பிரிக்காவிற்கென ‘தங்க தினார்’ நாணயத்தை முன்மொழிந்த லிபிய அதிபர் கடாபி ஆகியோர் இதேபோல் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்

தற்போது வெனிசுலா அதிபர் மதுரோ, சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து டாலருக்கு மாற்றான பொருளாதார முறையை உருவாக்கி வருவதால், அமெரிக்கா போதைப்பொருள் தடுப்பு அல்லது ஜனநாயகம் என்ற போர்வையில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது டாலர் ஆதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்கா நடத்தும் இறுதிப் போராட்டம் என விவரிக்கப்பட்டுள்ளது.