Thayagam Tamil Radio Australia

மட்டக்களப்பு சிறைச்சாலையின் மனிதாபிமானம்: 823 கைதிகள் தங்கள் உணவைத் தவிர்த்து வெள்ள நிவாரணம் வழங்கினர்

December 9, 2025

Spread the love

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் 823 கைதிகள் தங்கள் இரண்டு நாட்களுக்கான பகல் உணவைப் பெறாமல், அதற்கான பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்த மனிதாபிமான செயலின் ஒரு பகுதியாக, கைதிகள் 325 கிலோ அரிசி, 100 கிலோ சோயா, 50 கிலோ சீனி, 50 கிலோ பருப்பு, 52 கிலோ தேங்காய்ப் பால் மா மற்றும் 6 கிலோ தேயிலை போன்ற உணவுப் பொருட்களைச் சிறைச்சாலையில் நடந்த நிகழ்வில் சிறை அத்தியட்சகர் என். பிரபாகரனிடம் கையளித்தனர். சிறை அத்தியட்சகர் பிரபாகரன், கைதிகளால் வழங்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டு சென்று, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.எஸ்.ஜே. அருள்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார். கைதிகளின் இந்த மனிதாபிமானச் செயலை மாவட்டச் செயலாளர் பெரிதும் பாராட்டினார்.