Thayagam Tamil Radio Australia

ஊர்காவற்துறை பிரதேச சபைத் திட்டம் தோற்கடிப்பு: ஆளும் தமிழ் காங்கிரஸின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 10 பேர் வாக்களிப்பு!

November 25, 2025

Spread the love

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) ஆளுகையின் கீழ் உள்ள ஊர்காவறத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம், அதன் சபைத்தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவால் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டபோது, பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களைக் கொண்ட சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மூவர் மட்டுமே வாக்களித்த நிலையில், அதை எதிர்த்து 10 உறுப்பினர்கள் வாக்களித்ததால் திட்டம் தோல்வியடைந்தது.

இந்தத் தோல்விக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (4 ஆசனங்கள்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (3 ஆசனங்கள்) ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாக்களித்தமையே பிரதான காரணமாகும். அத்துடன், ஆளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஜூன் மாதம் திருவுளச்சீட்டு (Draw) மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருப்பது பிரதேச சபைக்குள் நிலவும் கடுமையான அரசியல் பிளவுகளை வெளிப்படுத்துகிறது.