ஒருவரைக் கடத்திச் சென்று திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள நிலத்தடிப் பதுங்குகுழியில் அடைத்து வைத்து காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பாக, இரண்டு முன்னாள் கடற்படைப் பெண் வீரர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஹபுத்தளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடைய இரண்டு முன்னாள் கடற்படைச் சிப்பாய்கள் ( ஆவர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நபரை இந்தச் சந்தேக நபர்கள் கடத்திச் சென்று, திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள நிலத்தடிச் சிறையில் தடுத்து வைத்த பின்னர் காணாமல் போகச் செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.