கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 3, 2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மேலும், இந்தச் செயற்பாடு நிறுத்தப்படாவிட்டால், அது தற்போது நிலவும் நல்லிணக்க சூழலையும், மகிழ்ச்சியாக வாழ்கின்ற சூழலையும் குழப்பக்கூடியதாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Post Views: 252