Thayagam Tamil Radio Australia

ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு புதிய தலைவலி!

October 28, 2025

Spread the love

ஆஸ்திரேலியாவில் பல குடும்பங்கள் தங்களின் வீட்டுத் தபால் பெட்டிகளில், முன்னாள் வீட்டு உரிமையாளர்கள் அல்லது பழைய குத்தகைதாரர்களின் பெயரில் வரும் கடிதங்களால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

சட்டப்படி, மற்றவருக்கான கடிதங்களை கிழித்தல் அல்லது தூக்கி எறிதல் தவறு. அவற்றை இம்முகவரியில் இல்லை என்று எழுதிக் கொண்டு, மீண்டும் அஞ்சல் துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் பல குடும்பங்கள், இதைச் செய்தாலும் அஞ்சல் ஊழியர்கள் அந்தக் கடிதங்களை மீண்டும் எடுத்து செல்லவில்லை எனக் கூறுகின்றனர். சிலர் பல ஆண்டுகளாகவே இதே பிரச்சினையைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில நோயாளிகள், வீட்டைவிட்டு வெளியேறுவது கடினமாக இருப்பதால், கடிதங்களைத் திருப்பித் தர முடியாமல் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், “அஞ்சல் வழிமாற்று சேவை” (Mail Redirection Service) கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்த சேவையைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, அரசாங்கமும் அஞ்சல் துறையும் இதற்கான நிரந்தர தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.