யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “11 பேருக்கு மட்டும் அல்லாமல், மேலும் பலருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோத சொத்து சேகரிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
Post Views: 273