விசுவமடு தேராவில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு நேற்று சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதையடுத்து, துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இவ்விடம் தற்போது இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் துயிலும் இல்லத்தின் சிறிய பகுதியிலேயே நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்றைய வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, இராணுவத்தினர் தமது முகாமுக்கு அருகில் கம்பங்கள் அமைக்க வேண்டாம் என தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post Views: 298