Thayagam Tamil Radio Australia

வணிகர்களை காப்போம் ஆஸ்திரேலிய அரசின் புதிய நடவடிக்கை

October 27, 2025

Spread the love

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், மிரட்டல், அச்சுறுத்தல்கள் மற்றும் திருட்டு போன்ற குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த நடவடிக்கை  நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் கடைகளுக்குள் நுழைவதைத் தடைசெய்யும் வகையில் குறித்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது 

இந்த நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மத்திய பெருநகரப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் வெற்றியின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் குறித்த செயற்பாட்டை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன 

இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து, 1080 பேர் மீது 1395க்கும் மேற்பட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன, அத்துடன் 9இலட்சத்து 60 ஆயிரத்து 500 டொலர் மதிப்புள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.