Thayagam Tamil Radio Australia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்தும் விளக்கமறியலில்

October 17, 2025

Spread the love

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் வழக்கறிஞர்களும் முன்வைத்த வாதங்களை ஆய்வு செய்த பிறகு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை வழங்கினார்.

மேலும், விசாரணையைத் தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.