யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த மாதம் 27ஆம் திகதி, வாய் பேச முடியாத 35 வயதுடைய பெண் நள்ளிரவு வேளையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயன்ற நபரை எதிர்த்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது, அவர் தலைமறைவாகி இருந்தார். பின்னர் சந்தேக நபர் பதுங்கிய இடம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்.
விசாரணை முடிந்த பின்னர், சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி, நீதிமன்றம் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Post Views: 325