Thayagam Tamil Radio Australia

தமிழகத்தில் அகதிகளாக இருந்த நால்வர் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பினர்

October 16, 2025

Spread the love

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கடல் வழியாக தமிழகத்துக்கு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், அண்மையில் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த இவர்கள், இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளுக்கான முகாமில் நீண்டகாலமாக தங்கியிருந்தனர். சமீபத்தில் அவர்கள் படகில் தமிழகத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்த பின்னர், தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியதுடன், நீதிமன்றம் நால்வரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.