சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களும் பணமும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாரால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 7 பவுன் தங்க ஆபரணங்களும், பணமும் திருடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த நபர் திருடுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்திருந்து, இலக்கு வீட்டை முன்கூட்டியே அவதானித்து, பின்னர் திருடி தப்பிச் செல்வது வழக்கமாக இருந்தது என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.