பப்ஜி விளையாட்டின் உச்சக்கட்டத்தால் தாய் மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகர கஹ்னா பகுதியில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், PUBG விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் ஒருவனை தாய் கண்டித்ததையடுத்து தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், வீட்டிலிருந்த துப்பாக்கியால் தாய் , அண்ணன், மற்றும் இரு சகோதரிகள் சகோதரிகளை கொலை செய்துள்ளான்
விசாரணையில், விளையாட்டுக்கு அடிமையானதுதான் இந்தக் கொலையின் காரணம் என பொலிஸார் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதனை தொடர்ந்து, லாகூர் நீதிமன்றம் சிறுவனுக்கு 25 ஆண்டுகள் கொண்ட , நான்கு ஆயுள் தண்டனைகள் என மொத்தம் 100 ஆண்டு சிறைத்தண்டனையும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது
Post Views: 440