ஐ.நா. 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸும் (Anthony Albanese) நியூயோர்க் நகரில் உள்ள இலங்கை நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் (24) சந்தித்தனர்.
இருதரப்பு சந்திப்பில், இலங்கை–அவுஸ்திரேலிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சுற்றுலாத் துறை முன்னேற்றம், புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத், நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Post Views: 481