மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (01) காலை ஆரம்பித்து வைத்தார்.
இந்த திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம. ஜெகதீஸ்வரன், க. இளங்குமரன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, ஜெ. றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் பங்கேற்றனர்.