Thayagam Tamil Radio Australia

ராஜித சேனாரத்ன, நிமல் லான்சா – வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி

September 1, 2025

Spread the love

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசாங்கத்திற்கு 2 கோடி ரூபாவுக்கும் மேலான நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நிமல் லான்சா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நீர்கொழும்பு நகர சபை உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.