Thayagam Tamil Radio Australia

ஐக்கிய தேசியக் கட்சி: அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைக்கும் மாநாடு

August 31, 2025

Spread the love

ஐக்கிய தேசியக் கட்சி  அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்து, செப்டம்பர் 6-ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இந்நிகழ்வுக்கான கலந்துரையாடல் நேற்று காலை நடைபெற்றது. இதற்கான யோசனை, எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் திகதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சியை விட்டு வெளியேறிய மற்றும் கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைக்கும் திட்டத்தில் உள்ளதுடன். கூட்டத்தை சிறிகொத்த மையத்தில் அல்லாமல், நடுநிலையான இடத்தில் நடத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்முறை நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு புதிய திசையில் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.