இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ‘A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள், ‘B’ பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதிக வெப்பநிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளின் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 9 முதல் 28 வரை டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் போட்டிகளை இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 7:30க்கு ஆரம்பிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டி மட்டுமே நேர மாற்றம் இல்லாமல் நடைபெறும்.
இந்த மாற்றம் வீரர்கள் மற்றும் போட்டித் தரத்திற்கான பாதுகாப்பை முன்னிலையில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.