Thayagam Tamil Radio Australia

வடக்கு – கிழக்கு மனிதப்புதைகுழிகளுக்கும் இனப்படுகொலைக்கும் நீதி கோரி கையெழுத்து போராட்டம்

August 31, 2025

Spread the love

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உட்பட வடக்கு – கிழக்கு பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் நீதி கோருவதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்து இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளன.

இதேவேளை, இத்தகைய கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.