முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படும், லண்டன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழ் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடைய மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, இங்கிலாந்தின் பல்கலைக்கழக துணைவேந்தர் 2023 செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, குறித்த ஆவணம் போலியாக உருவாக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் தெரிவித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்தபோது, ரணில் விக்ரமசிங்க சார்பில் நீதிமன்றத்தில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதுதான் இந்த சந்தேகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்கா பிரவீன் உத்தரவின் பெயரில், இந்த கடிதம் தொடர்பான விசாரணைகளை சிஐடி அதிகாரிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.