Thayagam Tamil Radio Australia

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கு – இன்று நீதிமன்ற அமர்வு

August 25, 2025

Spread the love

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான நீதிமன்ற அமர்வு இன்று (25) நடைபெறுகிறது.

ஏற்கனவே சித்துப்பாத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து 147 மனித எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டிருந்தன.

அத்துடன், குறித்த இடத்தில் மேலும் மனித எலும்புக்கூட்டுகள் உள்ளனவா என்ற கேள்விக்கான ஸ்கேன் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்கால நடவடிக்கை குறித்த தீர்மானங்களை எடுக்க கடந்த வாரம் நீதிமன்ற அமர்வு நடைபெற்றிருந்தபோதும், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.