சத்துருக்கொண்டான் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் மூன்றாவது மாதாந்த அமர்வு, முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. அமர்வின் தொடக்கத்தில், சத்துருக்கொண்டான் படுகொலையில் பலியானோருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி,
“உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி தோண்டப்பட்டு வருகிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்ற அப்போதைய இராணுவ முகாமும் தோண்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்ததால், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 326