Thayagam Tamil Radio Australia

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பஸ் விபத்து – 5 பேர் உயிரிழப்பு

August 23, 2025

Spread the love

மேற்கு நியூயோர்க்கில் நிகழ்ந்த துயரகரமான பஸ் விபத்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா–கனடா எல்லையிலுள்ள நியூயோர்க் நகரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பஸ் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நேரத்தில் பஸ்ஸில் 52 பேர் பயணம் செய்துள்ளனர். பலர் சீட் பெல்ட் அணியாத நிலையில் இருந்ததால், விபத்து ஏற்பட்டபோது பயணிகள் தூக்கி வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இவ்விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை ஆபத்தானதாக கூறப்படுகிறது.