Thayagam Tamil Radio Australia

விஜய்யின் உரைக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்பு

August 22, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் உட்பட, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் விஜய் பல அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அதில் முக்கியமாக, இலங்கையிலிருந்து கச்சத்தீவை மீட்பது இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எடுக்கும் பாதிப்பை குறைக்கும் ஒரே தீர்வு எனவும், இந்தக் கோரிக்கையை பிரதமர் மோடி மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சி தொடர்பான அவரது கருத்து இலங்கையில் பெரும் விவாதத்திற்கு காரணமாகி உள்ளது. குறிப்பாக, வடக்கு மீனவர்கள் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அதேவேளை, இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்த அக்கறை இல்லாமல் நடிகர் விஜய் கருத்து வெளியிட்டுள்ளதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.