முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில், இந்நிலையில் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது, இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது முதல் சம்பவமாகும்.
நிகழ்ச்சியைக் குறித்து மேலும் விசாரணைகள் தொடர்ந்துவரும் என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post Views: 334