நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவின் படி, ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழக்க இருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் விமல் வீரவன்ச, டி.டபிள்யூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் அடங்கும்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களின் மனைவிமாரும் இந்தச் சட்டம் மூலம் பாதிக்கப்படுவர்; 499 பேர் இதனால் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் பிரேமசிறி மானகே தெரிவித்தார்.
உலகிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் பறிக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என்று குறிப்பிட்ட மானகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பறிப்பது மனித உரிமை மீறல் என்றும், அரசாங்கம் இருமுறை சிந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.