Thayagam Tamil Radio Australia

அமெரிக்க பால் பொருட்கள் கனடா எல்லையில் தடுத்து நிறுத்தம்: வர்த்தக பதற்றம் அதிகரிப்பு

August 19, 2025

Spread the love

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சில பால் உற்பத்திப் பொருட்கள் கனடா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா–கனடா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

கனடா தனது உள்நாட்டு பால் பண்ணைத் துறையை பாதுகாக்க விநியோக மேலாண்மை அமைப்பு (Supply Management System) செயல்படுத்துகிறது. இந்த அமைப்பின் அடிப்படையில், குறிப்பிட்ட அளவைத் தாண்டி இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிக்கிறது; சில சந்தர்ப்பங்களில் இது 300% வரை உயரக்கூடும்.

இதனால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சீஸ், பால்மா போன்ற பால் பொருட்கள் கனடா சந்தையில் விற்க முடியாமல் பண்ணைகளில் குவிந்து, பல பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் வீணாக கொட்டப்படுகின்றன.

அமெரிக்கா, கனடாவின் இந்த நடவடிக்கைகள் USMCA ஒப்பந்த விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது அமெரிக்காவின் பால் உற்பத்தி மாநிலங்கள், குறிப்பாக விஸ்கான்சின் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையில் இந்த வர்த்தகக் கொள்கைகள் அமுல்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியானுள்ளன.