Thayagam Tamil Radio Australia

பெனால்டி ஷூட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி யூரோ சாம்பியன்!

July 28, 2025

Spread the love

மகளிர் யூரோ கிண்ணத்தின் பரபரப்பான இறுதிப் போட்டியில், உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி 2025ஆம் ஆண்டு யூரோ சாம்பியனாக சூடியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 1-1 என்ற சமநிலைக்கு பின்னர் நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் சுற்றில், இங்கிலாந்து 3-1 என வெற்றி பெற்றது.

2022ஆம் ஆண்டு முதல் முறையாக யூரோ கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து, இப்போது இரண்டாவது முறையாக வெற்றி பெறும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.