திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் காதல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில், 26 வயதான கவின்குமார் என்ற இளைஞர், 24 வயதான சுர்ஜித் என்பவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கவின்குமார், ஐ.டி. நிறுவன பட்டதாரி. அவரது காதல் நெருக்கம் பெண்ணின் குடும்பத்தினரால் எதிர்க்கப்பட்டதால், இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் தம்பியான சுர்ஜித், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கவின்குமாரை அரிவாளால் வெட்டிக் கொன்று தப்ப முயன்ற போதிலும், பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது ஆணவக் கொலை என உறுதியான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையின் முன்னணி அதிகாரியாக இருந்த பெண்ணின் பெற்றோரும் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
Post Views: 394