Thayagam Tamil Radio Australia

மது போதையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் உயிரிழப்பு – நயினாதீவில் சோக நிகழ்வு

July 21, 2025

Spread the love

மது போதையில் குடும்பத்துடன் ஏற்பட்ட தர்க்கத்தின் பின்னணியில், தன்னை தீ வைத்து கொள்ள போவதாக மிரட்டிய நயினாதீவு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தீவிபத்தில் தீவிரமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி, சம்பவத்தில் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டாருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சி செய்வதாக மிரட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பற்றியதால், வீட்டார் உடனடியாக தீயினை அணைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவர், இறுதியாக நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.