சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வவுனியா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடையவர் ஆவார். அவரை தொடர்ந்து விசாரணைக்காக கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
Post Views: 407