Thayagam Tamil Radio Australia

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை? – பதவி நீக்கத்திற்குப் பிறகு மரணம் மர்மம்!

July 8, 2025

Spread the love

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய ரோமன் ஸ்டாரோவைட், தன்னுடைய பதவி நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ்கோ புறநகர் ஓடிண்ட்சோவோ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக ரஷ்ய குற்றவியல் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.

அதனருகே, அவருக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.

புடினின் திடீர் நடவடிக்கையைத் தொடர்ந்து மரணம்

ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஸ்டாரோவைட்டை பதவியிலிருந்து திடீரென நீக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த மரணம் பதிவானது.

இதனால், அவரை நீக்கியதற்கான காரணம் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய அரசு இதுவரை மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கவில்லை.