நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா, நாளை புதன்கிழமை அதிகாலை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
விழா அதிகாலை 4 மணிக்கு பூஜையுடன் ஆரம்பமாகி, காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை மற்றும் அதன்பின்னர் அம்மன் உள்வீதியுலா வந்து, 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.
09 மணிக்கு வெளிவீதியுலா புறப்பட்டு, 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 4 மணிக்கு பச்சை சாத்துதல் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி, 07 மணிக்கு வசந்தமண்டப பூஜையும், 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்காக அம்மன் புறப்பட்டு செல்வார்.
பக்தர்களின் வசதிக்காக விசேட படகு மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலதிகமாக, முதலுதவி, சாரணர், செஞ்சிலுவை அமைப்புகள் பாதுகாப்பு மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.