இன்று புதன்கிழமை (ஜூலை 2) முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கப் பெறுகிறது என்று ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
அதிவேகத் தரமான இணைய சேவையை வழங்கக்கூடிய ஸ்டார்லிங்க், தற்போது உலகெங்கும் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் இந்த இணையத்தள சேவை, தற்போது இலங்கையிலும் விரிவடையத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் இந்த சேவையை பெற விரும்பும் பயனர்களுக்கான கட்டணத் திட்டங்களும் வெளியாகியுள்ளன. நகரமும், கிராமமும் சேர்த்து நிலையான இணைய வசதியின்றி தவிக்கும் பகுதிகளில் இது ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்லிங்க் சேவை – முக்கிய அம்சங்கள்:
- செயற்கைக்கோள் மூலம் தரமான இணைய வசதி
- நகரப் பகுதியில் மட்டுமின்றி பிரதேசங்களிலும் பயன்படத்தக்கது
- SpaceX நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இயக்கம்
இலங்கையில் இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு புதிய பரிணாமமாக பார்க்கப்படுகிறது.
Post Views: 385