ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கர் டேர்க் (Volker Türk) செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை கையாள்வதற்கான இலங்கையின் நம்பிக்கையுடனான அணுகுமுறையும், நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பும் இந்த அனுமதி வழங்குவதன் மூலம் வெளிப்படுவதாக அமைச்சர் கூறினார்.
“ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும், நாடு முழுவதும் எந்த இடத்திற்கும் செல்லுவதற்கும் எந்தவித தடையும் இலங்கை அரசாங்கம் விதிக்காது,” என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் உறுதியளித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் சர்வதேச கவனம் நாடளாவிய மற்றும் உலகளாவிய அளவில் மீண்டும் தீவிரமாகி வரும் நிலையில், இச்செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.