ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படமாட்டாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவரது கூறற்படி, 2029ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழமைபோல் மாற்றமின்றி நடைபெறும் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், அதற்குப் பிறகு பரீட்சையின் அவசியம் தொடர்பில் மறுமுலயம் செய்வதற்காக 2028ஆம் ஆண்டில் சிறப்பு குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய (ஜூன் 20) பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
பரீட்சை அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டம் தற்போது பரீட்சை திணைக்களம் மூலம் தயாரிக்கப்பட்டுவருகிறது என்றும், பாடசாலைகளுக்கு இடையிலான தரநிலை வேறுபாடுகளை படிப்படியாக நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்குத் உருவாகும் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் எதிர்காலத்தில் கல்வி கட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.