செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி சம்பவத்துக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலும், யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை உறுதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டம், செம்மணிப் பகுதியில் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, நீதிக்காக உரத்தக் கோஷங்களை எழுப்பினர்.
இவ்வேளை, “வடக்கில் மனிதப் புதைகுழிகள் என்பவை வதந்திகள்” என நீதி அமைச்சர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
புதைகுழி தொடர்பான உண்மை நிலையை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே போராளிகளின் முக்கியக் கோரிக்கையாகும்.