முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (CIABOC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தப் பட்டியலில் மூன்று தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்துகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகளுக்கு அமைவாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவொன்று தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
விசாரணையில் உள்ள முக்கிய நபர்கள்:
விசாரணை எதிர்கொள்கின்ற முக்கிய அரசியல்வாதிகள் வருமாறு:
- நாமல் ராஜபக்ஷ
- மஹிந்த யாப்பா அபேவர்தன
- மஹிந்த அமரவீர
- சாமர சம்பத் தசநாயக்க
- ரோஹித அபேகுணவர்தன
- பவித்ரா வன்னியாரச்சி
- கஞ்சன விஜேசேகர
- சாகல ரத்நாயக்க
- ஜானக திஸ்ஸகுட்டிஆரச்சி
- வஜிர அபேவர்தன
- மஹிபால ஹேரத்
- அநுர பிரியதர்ஷன யாப்பா
- மனுஷ நாணாயக்கார
- வடிவேல் சுரேஸ்
- துஷார பதிரண
- ஹர்ஷன ராஜகருணா
- சாணக்கியன் இராசமாணிக்கம்
- சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
- சாந்த அபேசேகர
மேலும், முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்கால நடவடிக்கைகள்:
சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும், உரிய நேரத்தில் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கப்பட்டதாகத் தெளிவாகும் பட்சத்தில், அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டத்திற்கமைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.