Thayagam Tamil Radio Australia

வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்

June 18, 2025

Spread the love

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த தவமலர் சுரேந்திரநாதன் இன்று தெரிவாகியுள்ளார்.

இன்றைய தினம் (புதன்கிழமை) வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சபை கூட்டத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபுவின் தலைமையில் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கான சமீபத்திய உள்ளூராட்சி சபைத் தேர்தலில்,

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 7 ஆசனங்கள்
  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5 ஆசனங்கள்
  • தேசிய மக்கள் சக்தி – 3 ஆசனங்கள்
  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1 ஆசனம்
    என வெற்றி பெற்றனர்.

தவிசாளர் பதவிக்காக நடைபெற்ற வாக்களிப்பில்,

  • தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 வாக்குகள்,
  • இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மகாலிங்கம் மயூரனுக்கு 6 வாக்குகள் வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் அதிக வாக்குகளுடன் தவமலர் சுரேந்திரநாதன் நகர சபை தவிசாளராக தெரிவானார்.