Thayagam Tamil Radio Australia

இன, மத ஆக்கிரமிப்புகளைத் தடுக்க சர்வதேச அழுத்தம் தேவை

May 28, 2025

Spread the love

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இன, மத அடிப்படையில் திட்டமிட்டு நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்க சர்வதேச சமூகம் அழுத்தம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் அவரது குழுவுடன் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்ற சந்திப்பில், அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நிலங்கள், காவல்துறை, நிதியில் மீளமுடியாத அதிகாரங்கள் தேவை

சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள நிலப் பிரச்சினைகள், குறிப்பாக 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்புகள் குறித்து சிறீதரன் கவலை தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களுக்கு நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகிய துறைகளில் மீளமுடியாத அதிகாரங்களை கொண்ட, சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியக் குழு பங்கேற்பு

இந்த சந்திப்பில்:

  • ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ்
  • அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ்
  • திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர் ஜோ கிட்
  • அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட்
  • மூத்த ஆராய்ச்சி அதிகாரி சில்வெஸ்டர் வொர்திங்டன்

ஆகியோர் கலந்துகொண்டனர்.