யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் தனிமையில் வாழ்ந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்ற முதியவர், பராமரிப்புக்காக தங்கியிருந்த வீடொன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதியவருடன் கடந்த சில தினங்களாக குடும்பத்தினர் தொடர்பில் இல்லாததால், அவரை தேடி சென்ற குடும்பத்தினர், அவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.
உடனடியாக இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவளிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டமையால், அவர் இறந்து பல தினங்கள் கடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இறப்புக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தெளிவாகும் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.