யாழ்ப்பாணம் வரணி பகுதியில் திருமணமாகி பன்னிரண்டு நாட்களுக்குள் ஒரு இளம் பெண் உயிரிழந்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு, வரணி வடக்கு பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண் புதியதாக திருமணம் செய்யப்பட்டவர் என உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த திடீர் சம்பவம் குடும்பத்தினரும், உள்ளூர் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 340