இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்கள் குவித்தது.
225 ஓட்டங்கள் எனும் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முழு 20 ஓவர்களையும் ஆடியும் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது. இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றியைத் தட்டிச்சென்றது.
போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிரிஸ்ணா, ஆட்டநாயகனாக (Player of the Match) தேர்வு செய்யப்பட்டார்.