மெல்போர்னின் கார்ல்டன் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், ஆண்ட்ரூ சுலிவன் என்பவரை லிப்ட் அருகே நின்றபோது தாக்கி கொன்ற 24 வயது நிரம்பிய கிளவுட் ஆலன் மீது நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆலன், இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து, சுலிவனை லிப்ட் அருகே சந்தித்து, தகராறின்றி இருந்தபோதும் கத்தியால் தாக்கினார்.
வழக்கின் விசாரணையில், தாக்குதலின் போது சுலிவன் எதிர்ப்பின்றி நடந்துகொண்டிருந்தார் என்பதும், சுலிவன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், ஆலன் அவரை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார் என்பதும் சம்பவத்திற்கு பின் ஆலன் குயின்ஸ்லாந்திற்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
நீதிமன்றம், அவரது செயல்கள் சமூகத்திற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டு, 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, 7 ஆண்டு 4 மாதம் கழித்து பரோல் விண்ணப்பிக்க அனுமதித்துள்ளது.
குறித்த நபர் இதற்கு முன் மற்றொரு ஆயுத மிரட்டல் குற்றத்திலும் குற்றவாளியாக அடையலாம் காணப்படமை குறிப்பிடத்தக்கது.