Thayagam Tamil Radio Australia

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு அணிகள் முதலிடம்-17

September 22, 2022

Spread the love


2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய இரண்டு அணியினரும் வடமாகாணத்தில் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. 

மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தினை சேர்ந்த 5 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் அணியினர் பங்குகொண்டிருந்தார்கள்.