மட்டக்களப்பு மாவட்டம் கறுவப்பங்கேணியில், இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், அரோஸ் வீதியைச் சேர்ந்த எஸ். நிசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச மக்கள் கூறுவதாவது,
“இளைஞர் ரயில் கடவையை கடந்து செல்லும் நேரத்தில், தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். அதன்போதுதான் ரயிலில் மோதுண்டார்” என தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவத்தில் மோதிய ரயிலில் ஏற்றி ஏறாவூர் ரயில் நிலையத்தில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலும் விசாரணைகள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Post Views: 398