Thayagam Tamil Radio Australia

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்தார் வியான் முல்டர்

July 8, 2025

Spread the love

பிரையன் லாரா ஒரு சகாப்தம் , இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் வியான் முல்டர், 334 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 367 ஓட்டங்களை குவித்திருந்தார்.

400 ஓட்டங்கள் அடைய 34 ஓட்டங்கள் மட்டுமே தேவை இருந்தபோதும், அணியின் வெற்றி, முன்னோடி வீரரின் பெருமை, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

“பிரையன் லாரா ஒரு சகாப்தம். அவரிடம் அந்த சாதனை தொடர்வது சரியானது. மீண்டும் வாய்ப்பு வந்தாலும் அதே முடிவை எடுப்பேன்,”
என அவர் Cricbuzz இணையதள செவ்வியில் கூறியுள்ளார்.

முல்டரின் முடிவு, விராட் கோலி மற்றும் ஹசிம் ஆம்லா ஆகியோரின் சாதனைகளையும் மிஞ்சும் வகையில், அணித் தலைவர் ஒருவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த சாதனையாகப் பதிவாகியுள்ளது.

இச்செயலானது, அவரின் விளையாட்டு மனப்பான்மையும், விளையாட்டு மதிப்பையும் உலகளவில் பாராட்ட ஏற்படுத்தியுள்ளது.